அமெரிக்காவில் 1 கோடியை நெருங்கி வரும் கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கொரோனா பாதிப்பு 1 கோடியை நெருங்கியுள்ளது.
அமெரிக்காவில் 1 கோடியை நெருங்கி வரும் கொரோனா பாதிப்பு
Published on

வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. வைரஸ் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அந்த நாடு தத்தளித்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1 லட்சத்து 21 ஆயிரத்து 888 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியை நெருங்கியுள்ளது. இதுவரை அங்கு 99 லட்சத்து 26 ஆயிரத்து 637 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 41 ஆயிரத்து 26 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com