சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு

சீனாவில் மீண்டும் டெல்டா வைரசின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பீஜிங்,

சீனாவின் ஹூனான் மாகாணத்தில்தான் முதல்முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக கூறப்படு கிறது. இருப்பினும் சீனாவில் நோய் தொற்றை அரசின் தீவிர நடவடிக்கையால் கட்டுப்படுத்தினர். ஆனால் மீண்டும் அங்கு டெல்டா வைரசின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

சீனாவின் நன்ஜிங் விமானநிலையம் மற்றும் ஷாங் ஜியாஜி சுற்றுலாத்தலம் ஆகியவற்றில் இருந்துதான் கடந்த மாதம் கொரோனா பரவியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சீனாவில் நேற்று ஒரு நாள் பாதிப்பு 180 ஆக உயர்ந்துள்ளது. இதில் 108 பேர் உள்ளூரை சேர்ந்தவர்கள். 35 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், 38 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தாக்கி இருப்பதாகவும் சீனாவின் தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தை ஒப்பிடும்போது இது அதிக பாதிப்பு ஆகும்.

தலைநகர் பீஜிங் மற்றும் பல நகரங்களில் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே மற்ற மாகாணங்களில் இருந்து தலைநகருக்கு வருவதற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஆயிரத்து 702 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் 54 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com