பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 644 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 644 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 644 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

* பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 644 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32 லட்சத்து 75 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் பலி எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 523 ஆக உயர்ந்துள்ளது.

* கொரோனா வைரஸ் பிறப்பிடமான சீனாவில் நேற்று புதிதாக 22 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 20 பேருக்கு வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.

* அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ கடந்த வாரம் செக் குடியரசு நாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற் கொண்ட நிலையில், இந்த பயணம் ரஷியா மற்றும் சீனாவுக்கு எதிரான அமெரிக்க மோதல்களில் செக் குடியரசை ஈடுபடுத்தும் முயற்சி என செக் குடியரசின் போஹேமியா மற்றும் மொராவியா கம்யூனிஸ்டு கட்சி விமர்சனம் செய்துள்ளது.

* ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கொரோனா வைரஸ் விவகாரத்தை முறையாக கையாளவில்லை என குற்றம் சாட்டியுள்ள அந்த நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி அவரை பதவி விலக வலியுறுத்தி உள்ளது.

* ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள காந்தஹார் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் 2 பேர் சாலைக்கு அடியில் கண்ணிவெடியை புதைத்து வைக்க முயன்ற போது அது எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது. இதில் அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com