

பாரிஸ்,
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸ் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைவாக பதிவாகி வந்தது.
இந்த நிலையில் பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 19,050 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59,17,397 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 141 பேர் உயிரிழக்க, கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 1,08,181 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51,88,782 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 6,20,434 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பிரான்ஸ் தற்போது 4-வது இடத்தில் உள்ளது.
பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தற்போது ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளது. இதன்படி நாடு முழுவதும் உள்ள உணவகங்கள், பார்கள், கடைகள், சினிமா தியேட்டர்கள், அருங்காட்சியகங்கள், கலச்சாரம் மற்றும் விளையாட்டு மையங்கள் திறக்கலாம் என்றும், நாடு தழுவிய இரவு ஊரடங்கு உத்தரவு மாலை 7 மணிக்கு பதிலாக 9 மணி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.