

புதுடெல்லி,
இந்தியா, சீனா, வங்காளதேசம், இலங்கை மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை கொண்ட ஆசியாவில் பெருமளவு மக்கள் தொகை காணப்படுகிறது. இவற்றில் 54.20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களில் 42.55 லட்சத்திற்கும் கூடுதலானோர் குணமடைந்து உள்ளனர்.
ஆசியாவில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 667 ஆக இன்று உயர்ந்து உள்ளது. எனினும், ஆசியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 4ல் 3 பங்கு அளவை இந்தியா கொண்டுள்ளது.
இந்தியாவில் 38.53 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 67,376 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவை தொடர்ந்து 1.80 லட்சம் கொரோனா பாதிப்புகளுடன் மற்றும் 7,616 உயிரிழப்புகளுடன் இந்தோனேசியா 2வது இடத்திலும், 2.97 லட்சம் கொரோனா பாதிப்புகளுடன் மற்றும் 6,328 உயிரிழப்புகளுடன் பாகிஸ்தான் 3வது இடத்திலும் உள்ளன.