

மேலும் உலக அளவில் கொரோனா உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்திலும், கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து 3-வது இடத்திலும் பிரேசில் உள்ளது.இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பிரேசிலில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு வைரஸ் தொற்று மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த நிலையில் பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 3,076 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனால் அங்கு மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 76 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதன் மூலம் பிரேசிலில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 89 ஆயிரத்து 492 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று ஒரே நாளில் புதிதாக 71 ஆயிரத்து 137 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 43 லட்சத்து 8 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.