பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 34,318 பேருக்கு கொரோனா

பிரான்சில் தற்போது சுமார் 10.63 லட்சத்துக்கு அதிகமானோர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 34,318 பேருக்கு கொரோனா
Published on

பாரிஸ்,

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் தற்போது 4-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 34,318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,08,606 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 283 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,02,164 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 42.43 லட்சத்தை நெருங்குகிறது. சுமார் 10.63 லட்சத்துக்கு அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com