

பெய்ஜிங்,
சீனாவில் முதன்முறையாக கொரோனா வைரசானது கண்டறியப்பட்டு பின்பு உலக நாடுகள் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனினும், பிற நாடுகளை விட சீனா பரவலை முதன்முதலில் கட்டுப்படுத்தி அதிகளவிலான பாதிப்புகளில் இருந்து தப்பியது.
சீனா உள்பட பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. 75 சதவீத மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது அரசுக்கு கவலை அளித்துள்ளது.
இதனால், பாதிப்புகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்நிலையில், சீனாவின் வடமேற்கில் கன்சு மாகாணத்தில், லான்ஜவ் சிட்டியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அந்த பகுதியில் மீண்டும் ஊரடங்கு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.