

வெலிங்டன்,
நியூசிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் தாக்குதல் தொடங்கி உள்ளது.
அங்கு 102 நாட்களுக்கு பிறகு கடந்த வாரம் புதிதாக 4 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இது இரண்டாவது அலையாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அங்கு நடைபெறவிருந்த நாடாளுமன்ற தேர்தலை அக்டோபர் மாதம் 17-ந் தேதிக்கு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அதிரடியாக ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில் அங்கு நேற்று மேலும் 13 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதனால் தொற்று பாதிப்புக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை 1,293 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 22 பேர் கொரோனாவால் உயிரிழந்து இருக்கிறார்கள்.