ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் 1,335 பேருக்கு கொரோனா

ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் 1,335 பேருக்கு கொரோனா

ஓமன் நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,74,364 ஆக உயர்ந்துள்ளது.
Published on

மஸ்கட்,

ஓமன் நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,335 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓமன் நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74,364 ஆக உயர்ந்துள்ளது.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் 785 பேர் குணமடைந்துள்ள நிலையில், ஓமனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு 1,54,771 ஆக அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 89 சதவீதமாக இருந்து வருகிறது.

அதே சமயம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்ததையடுத்து, ஓமனில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,798 ஆக அதிகரித்தது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 250 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com