

மாஸ்கோ,
ரஷிய அதிபர் புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து டிமிட்ரி பெஸ்கோவ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் என்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
டிமிட்ரி, இறுதியாக அதிபர் புதினுடன் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.