துருக்கியில் 5.44 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா சிகிச்சை

துருக்கியில் இதுவாரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,68,447 ஆக உயர்ந்துள்ளது.
துருக்கியில் 5.44 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா சிகிச்சை
Published on

அங்காரா,

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் துருக்கி தற்போது 7-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 55,802 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 42,68,447 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 318 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 35,926 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் துருக்கியில் கொரோனாவில் இருந்து இதுவரை 36.85 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ள நிலையில், தற்போது 5.44 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com