சீனாவில் கொரோனா வைரஸ் பலி 1,500-ஐ தாண்டியது

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,523 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பலி 1,500-ஐ தாண்டியது
Published on

பீஜிங்,

சீனாவில் கொரோனோ வைரஸ் தாக்குதலுக்கு பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தாக்குதல் தொடங்கிய உகான் நகரம் அமைந்துள்ள ஹுபெய் மாகாணத்தில் வசிப்பவர்களே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,523 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்று உறுதியானவர் களின் எண்ணிக்கையும் 66 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

உகான் நகரில் உள்ள ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகள் செய்வதற்காக ரோபோட்டுகள் பணியமர்த்தப்பட்டுள்ளன. மருந்து, மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை வழங்குவதற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவ ஊழியர்களை கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com