

கொழும்பு,
இலங்கையில் கொரோனா பாதிப்புகள் 3.5 லட்சத்திற்கு கூடுதலாக உயர்ந்து வருகிறது. இதனை முன்னிட்டு இன்றிரவு முதல் அந்நாடு முழுவதும் இரவு ஊரடங்கு அமலுக்கு வருகிறது என இலங்கை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். இதன்படி, இரவு 10 மணி முதல் காலை 4 மணிவரை மக்கள் வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.