

லண்டன்,
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். குணமடைந்த பிறகு, ஒரு வாரத்துக்கு முன்பு வீடு திரும்பினார். தற்போது தனது ஓய்வு இல்லத்தில் தங்கி இருக்கிறார்.
இங்கிலாந்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 20 ஆயிரத்த்தைத் கடந்துள்ளது. உலகில் அதிகமாக கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இங்கிலாந்து ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நாளை (திங்கள்கிழமை) காலை தனது அலுவலக பணிகளுக்கு மீண்டும் திரும்புகிறார்.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது அலுவலக பணிகளை தொடர்வது குறித்தும், இனி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் ராப் மற்றும் வேந்தர் ரிஷி சுனிக் ஆகியோருடன் மூன்று மணிநேர ஆலோசனையில் ஈடுபட்டார்.