சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில்தான், கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அந்த உகான் நகரில், ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நேற்று முன்தினம் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த 24 மணி நேரத்தில், அங்கு மேலும் 5 பேருக்கு கொரோனா தாக்கி உள்ளது.