ஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்பு: 8 இந்தியர்களின் உடல்நிலை தேறுகிறது

ஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 8 இந்தியர்களின் உடல்நிலை தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்பு: 8 இந்தியர்களின் உடல்நிலை தேறுகிறது
Published on

டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே யோகோஹாமா துறைமுகத்தில் டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல் கடந்த 3-ந்தேதியில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில் பயணித்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியதே இதற்கு காரணம். அதில் இருந்த 3 ஆயிரத்து 711 பயணிகளில், 634 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 8 இந்தியர்களும் அடங்குவர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பானுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. நோய் பாதிக்காத 130 இந்தியர்களை பத்திரமாக அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறியுள்ளது.

இதற்கிடையே, அந்த கப்பலில் இருந்து நேற்று மேலும் 400-க்கும் மேற்பட்டோர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com