

வாடிகன்,
சீனாவின் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரசால் இத்தாலி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த நாட்டில் இதுவரை 109 பேர் பலியாகி இருக்கின்றனர்.
இந்த நிலையில் இத்தாலியில் உள்ள வாடிகனில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
வாடிகனில் உள்ள மருத்துவ மையத்தில் அவரை அனுமதித்து கண்காணித்து வருகின்றனர். போப் ஆண்டவர் பிரான்சிஸ் வசிக்கும் வாடிகன், ஆயிரம் பேரை மட்டுமே மக்கள் தொகையாக கொண்ட தனிநாடாகும். இந்த நகரம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் அவசர உதவி மையம் திறக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.