கொரோனா பரவுவதால் தென்கொரியாவில் பள்ளிகள் மீண்டும் மூடல்

கொரோனா பரவுவதால் தென்கொரியாவில் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.
கொரோனா பரவுவதால் தென்கொரியாவில் பள்ளிகள் மீண்டும் மூடல்
Published on

சியோல்,

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று பெருமளவு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது அங்கு ஓசையின்றி கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவத்தொடங்கி உள்ளது.

நேற்று முன்தினம் அங்கு 24 மணி நேரத்தில் 79 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி உள்ளது. 2 மாதங்களில் இதுவே அதிகபட்ச பாதிப்பு ஆகும். இது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதன்காரணமாக நாடு முழுவதும் 200 பள்ளிக்கூடங்கள் மீண்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பள்ளிகள் அனைத்தும் சியோல் நகருக்கு வெளியே அமைந்திருப்பவை என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அவற்றின் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெறும் என அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com