

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் பஞ்சாப் பகுதியில் ஏவுகணை தரையிறங்கிய விவகாரத்தில் இந்தியாவில் பதில் ஏற்புடையதாக இல்லை பாக்., பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாக். பிரதமர் இம்ரான்கான் கூறுகையில்,
மார்ச் 9-ம் தேதி இந்தியாவின் சூப்பர் சோனிக் ஏவுகணை லாகூரில் இருந்து 275 கி.மீ தொலைவில் உள்ள மியான் சன் பகுதியில் தாக்கியுள்ளது. இதில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
மியான் சன்னுவில் இந்திய ஏவுகணை விழுந்ததற்கு நாங்கள் பதிலடி கொடுத்திருக்கலாம், ஆனால் நாங்கள் நிதானத்தை கடைபிடித்தோம். ஏவுகணை தரையிறங்கியது குறித்து இந்தியா அளித்த எளிமையான விளக்கம் ஏற்புடையது அல்ல, இந்த சம்பவம் தொடர்பான உண்மைகளை துல்லியமாக விசாரிக்க ஒரு விசாரணை அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது என கூறினார்.