பலூசிஸ்தானில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை; 7 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

பாகிஸ்தானின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பலூசிஸ்தானில் 7 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
பலூசிஸ்தானில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை; 7 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
Published on

பலூசிஸ்தான்,

பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் லோராலாய் மாவட்டத்த்தின் கோஹர் தம் என்ற பகுதியில் நேற்றிரவு பாகிஸ்தான் போலீசார் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதில், பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சூடு நடந்தது. இந்த மோதலில் 7 பயங்கரவாதிகள் சம்பவ பகுதியிலேயே சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். எனினும், அவர்களின் 3 கூட்டாளிகள் தப்பியோடி விட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com