கோர்ட்டுகளால் நிர்வாக சீர்கேடுகள்... சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பற்றி துணை ஜனாதிபதி வான்ஸ் கருத்து

வரிவிதிப்பதற்கு என ஜனாதிபதி டிரம்ப்புக்கு பிற பரவலான அதிகாரங்கள் உள்ளன என வான்ஸ் கூறினார்.
கோர்ட்டுகளால் நிர்வாக சீர்கேடுகள்... சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பற்றி துணை ஜனாதிபதி வான்ஸ் கருத்து
Published on

வாஷிங்டன் டி.சி.

அமெரிக்க ஜனாதிபதியாக 2-வது முறையாக டிரம்ப் பதவியேற்ற பின்னர் நாட்டின் கஜானாவில் நிதியை நிரப்பும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சீனா, கனடா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடுமையான வரிவிதிப்புகளை அமல்படுத்தினார். இதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரிவிதிப்புகள் கடுமையாக்கப்பட்டன. இந்திய சந்தை பெருமளவில் நெருக்கடியை சந்தித்தது.

இந்த நிலையில், அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு உள்ளது. இதனால், இந்தியாவுக்கான வரிகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், டிரம்ப்பின் வரிவிதிப்புகளுக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு கிளம்பியது. சில வணிக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரிக்கப்பட்டது.

அதில், டிரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லாது என நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில் தெரிவித்தனர். இதுபற்றி துணை ஜனாதிபதி வான்ஸ் கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு ஆனது கோர்ட்டுகளால் ஏற்படுத்தப்படும் நிர்வாக சீர்கேடுகள் என குறிப்பிட்டார். இதனால், அமெரிக்க தொழிற்சாலைகளை டிரம்ப் பாதுகாப்பதை கடினப்படுத்தி விடும் என்றார்.

இறக்குமதிகளை ஒழுங்குபடுத்த ஜனாதிபதிக்கு அமெரிக்க நாடாளுமன்றம் அதிகாரம் அளித்து உள்ளது. இதனை கவனத்தில் கொள்ளாமல் சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்துள்ளது. இது கோர்ட்டு செய்த அக்கிரமம். இதனால், அமெரிக்க ஆலைகளை பாதுகாப்பதில் சிரமம் ஏற்படும். வினியோக சங்கிலியை மீட்டெடுப்பதும் கடினப்பட்டு விடும் என்று கூறினார்.

வரிவிதிப்பதற்கு என ஜனாதிபதி டிரம்ப்புக்கு பிற பரவலான அதிகாரங்கள் உள்ளன. அமெரிக்க தொழிலாளர்களை பாதுகாக்க அவற்றை அவர் பயன்படுத்துவார். இந்த அரசு நிர்வாகத்தின் வர்த்தக முன்னுரிமைகளை அவர் நவீனப்படுத்துவார் என்றார்.

இதன்படி வர்த்தக சட்டம் 1974, பிரிவு 122-ன் கீழ் கொண்டு வரப்பட்ட 10 சதவீத வரி விதிப்புக்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார். இந்த சட்ட பிரிவின்படி, கட்டணம் செலுத்துதலில் ஏற்படும் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் 150 நாட்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்த (அதிகபட்சம் 15 சதவீதம்) அனுமதி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com