இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து..! பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லண்டன்,

இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வருவதாகவும், இது தொடர்பான செயல்முறைகள் இந்த வார இறுதியில் தொடங்குவதாகவும் பிரதமர் போரிஸ் ஜான்சன், அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கூறிய அவர், ஏப்ரல் 1-ந் தேதி முதல் குளிர்காலம் முடிந்து வைரஸ் பரவல் குறைவாகிறபோது, பொதுமக்களுக்கு இலவச, அறிகுறி மற்றும் அறிகுறியற்ற பரிசோதனையை நாங்கள் நிறுத்துவோம். கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கான சட்டத் தேவை வியாழக்கிழமை முதல் நீக்கப்படும்.

இங்கிலாந்து, அரசு விதித்த கட்டுப்பாடுகளில் இருந்து தனிப்பட்ட பொறுப்புக்கு நகரும். எதிர்கால கொரோனா மாறுபாடுகளை சமாளிக்க தற்செயல் நடவடிக்கைகள் பராமரிக்கப்படும். மற்றவர்களிடம் கரிசனையுடன் இருக்குமாறு மக்களை கட்டாயப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். நடைமுறை ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் ஒருவருக்கொருவர் பொறுப்புணர்வை கொண்டிருந்து, அன்புக்குரியவர்களை கொரோனா தொற்று ஏற்படுவதில் இருந்து காக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com