

லண்டன்,
இங்கிலாந்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கு தற்போது அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,551 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 50,22,893 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 336 ஆக உயர்ந்துள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 43 லட்சத்து 48 ஆயிரத்து 864 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 5,45,693 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.