பைசர் கொரோனா தடுப்பூசி குற்றவாளிகளால் குறிவைக்கப்படலாம் - இன்டர்போல் எச்சரிக்கை

பைசர் கொரோனா தடுப்பூசி குற்றவாளிகள் குழுவால் குறிவைக்கப்படலாம் சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) எச்சரிக்கை விடுத்து உள்ளது.
பைசர் கொரோனா தடுப்பூசி குற்றவாளிகளால் குறிவைக்கப்படலாம் - இன்டர்போல் எச்சரிக்கை
Published on

லண்டன்

அமெரிக்காவின் பைசர் தடுப்பு மருந்து நிறுவனம் தற்போது 95 சதவீதம் பலனளிக்கும் சக்தி வாய்ந்த கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதனை ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், பைசர் - பயோ என்டெக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த வாரம் முதல் பயன்பாட்டுக்கு வரும் எனவும் இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. உலக அளவில் பைசர் தடுப்பூசியை பொது பயன்பாட்டுக்கு அனுமதித்த முதல் நாடு இங்கிலாந்து ஆகும்.

இதை தொடர்ந்து சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) கொரோன தடுப்பூசி குற்றவாளிகள் குழுவால் குறிவைக்கப்படலாம் என கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இது குறித்து இன்டர்போல் பொதுச் செயலாளர் ஜூர்கன் ஸ்டாக் கூறியதாவது:-

தடுப்பூசிகளை வெளியிடுவதற்கு அரசாங்கங்கள் தயாராகி வருவதால், குற்றவாளிகள் குழு மற்றும் குற்றவியல் அமைப்புகள் விநியோகச் சங்கிலிகளில் ஊடுருவ அல்லது சீர்குலைக்க திட்டமிட்டுள்ளன. குற்றவியல் நெட்வொர்க்குகள் போலி வலைத்தளங்கள் மற்றும் போலி மருந்துகள் மூலம் குறிவைக்கும், இது அவர்களின் மக்களின் ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com