

மாலே,
கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், இந்தியா மற்றும் இதர தெற்காசிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மாலத்தீவுகள் அரசு தடை விதித்துள்ளது. கொரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மாலத்தீவுகள் அரசு தெற்காசிய நாடுகளுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.
எனினும் சுகாதார நிபுணர்களுக்கு இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மே 13-ஆம் தேதி முதல் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவுகள் நாட்டில் இதுவரை 38 ஆயிரத்து 520 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் 36 சதவீதம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் இரு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது.