இந்திய பயணிகள் சிங்கப்பூரில் நுழைய நவம்பர் 29ம் தேதி முதல் அனுமதி!

சிங்கப்பூரில் கொரோனா தனிமைப்படுத்தலை தவிர்ப்பதற்காக தடுப்பூசி செலுத்தப்பட்டோருக்கான பயணப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய பயணிகள் சிங்கப்பூரில் நுழைய நவம்பர் 29ம் தேதி முதல் அனுமதி!
Published on

புதுடெல்லி,

சிங்கப்பூரில் கொரோனா வழிகாட்டு நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தனிமைப்படுத்தலை தவிர்ப்பதற்காக  தடுப்பூசி செலுத்தப்பட்டோருக்கான பயணப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

அதாவது, இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகள் குவாரண்டைன் எனப்படும் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டாம் என்று சிங்கப்பூர் பயணிகள் விமான ஆணையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 29ம் தேதி முதல் இந்த நடைமுறை வர உள்ளது.

அதே போல் கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொண்ட கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக ஆகிய நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவோரும் டிசம்பர் 6ம் தேதி முதல் அனுமதிக்கப்படுவர். அவர்களும் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா தனிமைப்படுத்தலில் பயணிகள் இருக்க வேண்டாம், எனினும், சிங்கப்பூரில் நுழைவதற்கு 2 தினங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

கொரோனா பாதிப்பு அதிகமானால், மேற்கண்ட நடைமுறைகளில் மாற்றம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com