துருக்கி அதிபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி..!

துருக்கி அதிபர் தயீப் எர்டோகனுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

அங்காரா,

துருக்கி நாட்டின் அதிபர் தயீப் எர்டோகனுக்கு உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதை அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் லேசான அறிகுறிகளுக்கு பிறகு நானும், என் மனைவியும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டோம். அதில் எங்கள் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. மேலும் அது உருமாறிய ஒமைக்ரான் தொற்று என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. நல்லவேளையாக எங்களுக்கு லேசான நோய் பாதிப்பே உள்ளன. நான் வீட்டில் இருந்தபடியே எனது பணிகளை தொடர்வேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com