அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட 23 பேர் பக்க விளைவுகளால் மரணம்

அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட 23 பேர் பக்க விளைவுகளால் மரணம் அடைந்து உள்ளனர்.
அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட 23 பேர் பக்க விளைவுகளால் மரணம்
Published on

ஒஸ்லோ:

அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மருந்தை இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கொள்முதல் செய்து வருகிறது. அதேபோல் பைசர் நிறுவன தடுப்பூசியை நார்வே நாடும் கொள்முதல் செய்து மக்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் விநியோகத்தை தொடங்கியது.

இதுவரை, நாடு முழுவதும் 33 ஆயிரம் பேருக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், 29 பேர் பக்க விளைவு பாதிப்பாலும், 23 பேர் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் இறந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதெடர்பாக ரஷிய செய்தி நிறுவனமான ஸ்பூட்னிக், நார்வே நாட்டின் மருத்துவ நிறுவன இயக்குனர் ஸ்டெய்னர் மேட்சனின் அறிக்கையை மேற்கோளிட்டு வெளியிட்ட செய்தியில்,

நார்வே நாட்டில் பைசர் தடுப்பூசி போட்ட சில நாட்களில் 13 பேர் இறந்துள்ளனர். இவர்களில் ஒன்பது பேருக்கு கடுமையான பக்க விளைவுகளும், 7 பேருக்கு குறைவான பக்க விளைவுகள் உள்ளன. மொத்தம் 23 பேர் பக்கவிளைவுகளால் இறந்துள்ளனர். இதுவரை 13 பேரின் இறப்புகள் மட்டும் உறுதி செய்யப்பட்டு, அதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

பைசர் தடுப்பூசி போட்டு இறந்த அனைவருமே 80 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்கள், நார்வேயில் உள்ள நர்சிங் ஹோம்களில் வாழ்ந்த முதியவர்கள். இவர்கள் பைசர் தடுப்பூசியைப் பயன்படுத்திய பின் காய்ச்சல் போன்ற சில சிரமங்களை சந்தித்தபின் இறந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், நார்வே நாட்டின் மருத்துவ நிறுவன இயக்குனர் ஸ்டெய்னர் மேட்சன் கூறுகையில், இதயம் சம்பந்தப்பட்ட நோய், முதுமை மற்றும் பல கடுமையான சார்பு நோய்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பக்கவிளைவுகளால் இறந்தவர்கள் குறித்து நாங்கள் அதிகம் கவலைப்படவில்லை. நோய்வாய்ப்பட்ட சிலரைத் தவிர மற்றவர்களுக்கு இந்த தடுப்பூசியால் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. தடுப்பூசி போடப்பட்ட நபர்களை தீவிரமாக கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com