இங்கிலாந்தில் மேலும் 2,412- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இங்கிலாந்தில் மேலும் 2,412- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் மேலும் 2,412- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
Published on

லண்டன்,

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,412- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,450,392 -ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் தொற்று பாதிப்புடன் 40,754- பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த ஒருவாரத்தில் மட்டும் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து இருப்பது அந்நாட்டு அதிகாரிகளை கவலை அடையச்செய்துள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு ,இங்கிலாந்தில் பரவுவுதால் கட்டுப்பாடுகளை தளர்த்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா ஹாட்ஸ்பாட் இடங்களில் தடுப்பூசி போடும் பணியை விரைவு படுத்துதல் மட்டும் போதாது, கட்டுப்பாடுகளையும் தொடர வேண்டும் என மருத்துவ நிபுணர்கள், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com