ரஷியாவில் கல்லூரியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு

ரஷியாவில் கல்லூரியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
ரஷியாவில் கல்லூரியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு
Published on

மாஸ்கோ,

ரஷியாவின் கிரீமியாவில் உள்ள தொழிற்பயிற்சி கல்லூரியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர். இந்த குண்டுவெடிப்பு, பயங்கரவாத தாக்குதல் என கருதப்படுகிறது. இதுபற்றி விசாரணை நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவ இடத்துக்கு வெடிபொருள் வல்லுனர்கள் விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். விசாரணையும் நடைபெற்று வருகிறது.

கிர்மீயா பகுதி கடந்த 2014-ம் ஆண்டு ரஷியா மேற்கொண்ட நடவடிக்கையினால் உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com