இலங்கையில் மந்திரி சபை விரிவாக்கம்: 37 பேர் புதிதாக பதவியேற்பு

இலங்கை மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.புதிதாக 37 பேர் இணை மந்திரிகளாக பொறுப்பேற்றனர்.
இலங்கையில் மந்திரி சபை விரிவாக்கம்: 37 பேர் புதிதாக பதவியேற்பு
Published on

கொழும்பு,

அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்கள் வெகுண்டெழுந்தனர். மக்கள் கிளர்ச்சிக்கு பயந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்து ராஜபக்சே சகோதரர்கள் விலகினர்.

இதையடுத்து, புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, அனைத்து கட்சியினரையும் உள்ளடக்கிய அமைச்சரவை உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார். கடந்த மாதம் அவர் இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இலங்கை மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.புதிதாக 37 பேர் இணை மந்திரிகளாக பொறுப்பேற்றனர். இதில், முன்னாள் அதிபர் கோத்தபயவின் உறவினர் சசீந்திரா ராஜபக்சே, நீர் பாசனத் துறை இணை மந்திரியாக பொறுப்பேற்றார். மந்திரிசபை விரிவாக்கத்தில், ராஜபக்சே சகோதரர்களின் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com