ரஷிய தூதரக அதிகாரிகள் 18 பேரை வெளியேற்றிய குரேஷியா அரசு..!!

ரஷிய தூதரக அதிகாரிகள் 18 பேரை குரேஷியா அரசு, அந்நாட்டைவிட்டு வெளியேற்றி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெல்கிரேட்,

உக்ரைனில் போர் தொடுத்து வரும் ரஷியா மீது, உலக நாடுகள் பலவும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அதோடு இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் விதமாக, சில நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றி வருகின்றன.

அந்த வகையில், மத்திய ஐரோப்பிய நாடான குரேஷியா தங்கள் நாட்டில் உள்ள ரஷிய தூதரகத்தில் பணியாற்றி வரும் 18 தூதரக அதிகாரிகள், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் 6 பேரை நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரஷியா, இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com