குரேஷியா ராணுவ படைகளின் 30-வது வெற்றி தின அணிவகுப்பு - ஆர்வத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்

‘ஆபரேஷன் ஸ்டார்ம்’ மூலமாக செர்பியாவின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பகுதிகளை குரேஷிய ராணுவம் மீட்டெடுத்தது.
குரேஷியா ராணுவ படைகளின் 30-வது வெற்றி தின அணிவகுப்பு - ஆர்வத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்
Published on

சாக்ரெப்,

கடந்த 1995-ம் ஆண்டு குரேஷிய படையினர், செர்பிய கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை மீட்கும் நோக்கில் 'ஆபரேஷன் ஸ்டார்ம்'(Operation Storm) என்ற அதிரடி ராணுவ தாக்குதலை மேற்கெண்டனர். குரேஷிய சுதந்திரப் போரின் முக்கிய ராணுவ நடவடிக்கையாக 'ஆபரேஷன் ஸ்டார்ம்' கருதப்பட்டது.

இந்த தாக்குதலின் மூலம் செர்பியாவின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பகுதிகளை குரேஷிய ராணுவம் மீட்டெடுத்தது. குரேஷியாவின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக விளங்கும் 'ஆபரேஷன் ஸ்டார்ம்' ராணுவ வெற்றியை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் 30-ம் ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில், தலைநகர் சாக்ரெப்பில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. குரேஷிய ராணுவ பலத்தை பறைசாற்றும் டாங்கிகள் அணிவகுத்ததுடன், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமான சாகச நிகழ்ச்சிகளும் அரங்கேறின. இதனை பெதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com