பாகிஸ்தானில் எல்லை கடந்த பயங்கரவாத தாக்குதல்; 8 வீரர்கள் பலி

பாகிஸ்தானில் நடந்த எல்லை கடந்த பயங்கரவாத தாக்குதலில் 8 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 12 வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர்.
பாகிஸ்தானில் எல்லை கடந்த பயங்கரவாத தாக்குதல்; 8 வீரர்கள் பலி
Published on

பெஷாவர்,

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடந்த எல்லை கடந்த பயங்கரவாத தாக்குதலில் அந்நாட்டின் 8 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். பல்வேறு பகுதிகளிலும் குண்டுவெடிப்பு சம்பவங்களும் நடந்துள்ளன.

இதுபற்றி பாகிஸ்தான் ஆயுத படையின் ஊடக அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய வேலி பகுதியில் இருந்து குர்ரம் மாவட்டத்திற்குள், ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் நேற்றும், நேற்று முன்தினமும் ஊடுருவ முயன்றனர் என தெரிவித்து உள்ளது.

ராணுவம் பதிலடி கொடுத்து இதனை முறியடித்து உள்ளது. இந்த சம்பவத்தில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். ரோந்து பணியில் 4 போலீஸ் கான்ஸ்டபிள்கள் கொல்லப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில், வடக்கு வசீரிஸ்தானில் 3 வெவ்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com