கச்சா எண்ணெய் விலை குறையும்: பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது டிரம்ப் பேச்சு

பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டொனால்டுடிரம்ப் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
கச்சா எண்ணெய் விலை குறையும்: பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது டிரம்ப் பேச்சு
Published on

எவியான்,

பிரான்சில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டிற்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், பிரதமர் மோடியை பாராட்டியதுடன், இந்தியா பயணம் குறித்த நினைவுகளையும் பகிர்ந்தார்..அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: கடந்த முறை இந்தியாவுக்கு சென்றபோது மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அப்போது புதிய மைதானம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. அதில் சுமார் 1.5 லட்சம் பேர் அமரும் வசதி இருந்தது. மைதானத்திற்குள் ஆயிரக்கணக்கானோர் இருந்ததுடன், வெளியேயும் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். இந்தியாவில் எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம் கிடைத்தது என்றார்.

ரஷ்யா மீது கூடுதல் தடைகள் விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், அது குறித்து பரிசீலித்து வருகிறோம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும், அணு ஆயுதம் இல்லாத ஈரானை உருவாக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடியும் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளார். பேச்சுவார்த்தைக்கு மிகவும் கடினமானவர் மோடி. அவரைப் பார்த்தால் மிகவும் அமைதியான நபர் போல் தோன்றுவார். ஆனால் பேச்சுவார்த்தைகளில் மிகவும் உறுதியானவர். இந்திய மக்களை அவர் நேசிக்கிறார். அதே நேரத்தில் அமெரிக்காவுடனான உறவுகளையும் மதிக்கிறார். ஹூஸ்டனில் நடைபெற்ற ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் மைதானம் நிரம்பி வழிந்தது. எதிர்காலத்தில் மீண்டும் இந்தியாவுக்கு வர உள்ளோம்

நான் 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன். தாக்குதல் நடத்தப்பட்டால் இந்தியாவுக்கு அமெரிக்கா உதவும். இங்குள்ள அனைவரும் இந்தியாவை நேசிக்கிறார்கள். பிரதமர் மோடி மீது அனைவரும் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். கச்சா எண்ணெய் விலை குறைவதை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்"என்று தெரிவித்தார்.

டிரம்ப் உடனான பேச்சுவார்த்தையின் போது, கடல்சார் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி முக்கிய கோரிக்கையை முன்வைத்தார். பிரதமர் மோடி கூறுகையில், “சர்வதேச கடல் வழித்தடங்களில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை இந்தியா எப்போதும் வலியுறுத்தி வருகிறது. உலகின் பல கடற்பரப்புகளில் லட்சக்கணக்கான இந்திய மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பும் மிக முக்கியமானது. ஈரானுடனான ஒப்பந்தத்தில் மாலுமிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நம்புகிறேன்” என்று மோடி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com