கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை

கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை
Published on

ஹவானா,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கிரீஸ், சுரினாம் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று கியூபா சென்றடைந்தார். ஹவானா விமான நிலையத்தில் வந்திறங்கிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை அந்நாட்டு மந்திரி மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர்.

இதனை அடுத்து, முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்துக்கு சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அந்நாட்டில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கும் அவர், அதிபரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். தொடர்ந்து, ஹவானாவில் உள்ள மகாத்மா காந்தி நினைவு சிலைக்கும், ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் மரியாதை செலுத்த உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com