லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு


லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு
x
தினத்தந்தி 11 Jun 2025 11:18 PM IST (Updated: 12 Jun 2025 1:39 PM IST)
t-max-icont-min-icon

லாஸ் ஏஞ்சல்சில் நடந்து வரும் போராட்டம் மற்ற நகரங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குடியேற்றம் தொடர்பான கடும் நட வடிக்கைகளுக்கு எதிராக கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்துள்ளது.போலீஸ் வாகனங்கள் உள்பட பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. வணிக வளாகங்கள், கடைகள் சூறையாடப்பட்டன.கலவரத்தை ஒடுக்க தேசிய காவல் படையினர் மற்றும் கடற்படை வீரர்களை ஜனாதிபதி டிரம்ப் களமிறக்கி உள்ளார். இருந்த போதிலும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

பல இடங்களில் தேசிய படையினர்-போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் லாஸ் ஏஞ்சல்சில் 5-வது நாளாக நீடிக்கும் போராட்டங்களால் பதற்றம் நிலவி வருகிறது.இதற்கிடையே போராட்டங்களுக்கு மத்தியில் கடைகளுக்குள் புகுந்து பொருட்களை திருடி செல்லும் சம்பவங்கள் நடந்து வருகிறது. முகமூடி அணிந்த சிலர் ஆப்பிள் ஸ்டோர் மற்றும் வணிக வளாகங்களுக்குள் புகுந்து விலை உயர்ந்த ஆப்பிள் ஆப்பிள் போன்கள், லேப்-டாப் ஆகியவற்றை தூக்கிக் கொண்டு ஓடினர். அதேபோல மற்ற கடை களையும் பொருட்களை சேதப்படுத்தி திருடி சென்றனர்.இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரவுநேர ஊரடங்கு உத்தரவை மேயர் கரேன் பாஸ் பிறப்பித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும் போது, நாச வேலையைத் தடுக்கவும். கொள்ளை அடிக்கப்படுவதைத் தடுக்கவும், உள்ளூர் அவசர நிலையை அறிவித்து, லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளேன். போராட்டங்கள் நடந்த பகுதியை உள்ளடக்கிய நகர மையபகுதியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றார். இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்சில் நடந்து வரும் போராட்டம் மற்ற நகரங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நியூயார்க், சிகாகோ. டல்லாஸ், அட்லாண்டாவில் போராட்டங்களை நடத்த திட்ட மிட்டுள்ளனர்.

1 More update

Next Story