அமெரிக்க ஆஸ்பத்திரிகளில் சைபர்கிரைம் தாக்குதல்; சுகாதார சேவைகள் முடக்கம்

அமெரிக்க ஆஸ்பத்திரிகளில் உள்ள கம்ப்யூட்டர்களில் சைபர்கிரைம் தாக்குதல் நடத்தப்பட்டது.
அமெரிக்க ஆஸ்பத்திரிகளில் சைபர்கிரைம் தாக்குதல்; சுகாதார சேவைகள் முடக்கம்
Published on

அமெரிக்காவின் கலிபோர்னியா, டென்னசி உள்பட 5 மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் சைபர் கிரைம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 900-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் இருந்து சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேரின் தகவல்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சைபர் கிரைம் தாக்குதல் நடத்தப்பட்ட ஆஸ்பத்திரிகளில் சர்வர்கள் அணைத்து வைக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த நோயாளிகள் உடனடியாக வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். இதன் காரணமாக அங்கு சுகாதார சேவைகள் பெரிதும் முடங்கின

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் தற்போது அமெரிக்காவில் வசிக்கும் ரஷியாவை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com