சைக்கிள் ஓட்டுவது ஆண்களின் பாலுறவு ஆரோக்கியத்தை பாதிக்காது ஆய்வில் தகவல்

சைக்கிள் ஓட்டுவது ஆண்களின் பாலுறவு ஆரோக்கியத்தையோ அல்லது சிறுநீர் பாதையின் செயல்பாடுகளில் பாதிப்பையோ ஏற்படுத்தாது என ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
சைக்கிள் ஓட்டுவது ஆண்களின் பாலுறவு ஆரோக்கியத்தை பாதிக்காது ஆய்வில் தகவல்
Published on

சைக்கிள் ஓட்டுவது ஆண்களின் பாலுறவு ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம் என்ற முந்தைய ஆய்வுகளிடம் முரண்படுவதாக ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 2,774 சைக்கிள் ஓட்டிகளுடன், 539 நீச்சலடிப்பாளர்களும், 789 ஓடுபவர்களும் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர். பலவித கேள்விகள் மூலம் அவர்களது பாலுறவு ஆரோக்கியம் குறித்து சோதிக்கப்பட்டது.

இந்த மூன்று குழுவினருக்கும் பாலுறவு ஆரோக்கியம் மற்றும் சிறுநீர் பாதையின் செயல்பாடுகள் ஒரே மாதிரியாக உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆராய்ச்சியாளர்கள் சைக்கிள் ஓட்டுபவர்களை ஓடுபவர்களுடனும், நீச்சலடிப்பாளர்களுடனும் ஒப்பிட்டுப் பார்த்தனர். அதில், இவர்களது பாலுறவு ஆரோக்கியம் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

''சைக்கிள் ஓட்டுவது பெரும் இதய நன்மைகளை அளிக்கும்'' என்கிறார் ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்கிய பெஞ்சமின் பிரையர். இவர் கலிஃபோர்னியா-சான் பிரான்ஸிஸ்கோவின் பல்கலைக்கழகத்தின் சிறுநீரக துறையை சேர்ந்தவர்.

''உடல் எடை அபாயங்களில் இருந்து, சைக்கிள் ஓட்டிகள் வெகு தொலைவில் இருப்பார்கள்.'' எனவும் அவர் கூறியுள்ளார்.

#Cycling #sexlife #study

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com