

அன்டனனரிவோ,
கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மடகாஸ்கர். இந்நிலையில், இந்திய பெருங்கடலில் கடந்த சில நாட்களுக்குமுன் புயல் உருவானது.
கசானி என்று பெயரிடப்பட்ட இந்த புயல் நேற்று இரவு மடகாஸ்கரின் அட்சினானா மாகாணத்தில் உள்ள தமசினா நகர் கடற்பகுதியில் கரையை கடந்தது.
இந்த புயல் காரணமாக அட்சினானா மாகாணத்தில் பலத்த காற்றுடன், கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கனமழை, புயல் காரணமாக பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. புயல் காரணமாக பொதுமக்கள் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மடகாஸ்கரை தாக்கிய கசானி புயலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 33 பேர் படுகாயமடைந்தனர். புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப்பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.