தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்

தினசரி மவுத்வாஷ் மூலம் நாம் வாய் கொப்பளிச்சா கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் என புதிய ஆய்வில் தெரியவந்து உள்ளது.
தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்
Published on

லண்டன்

உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உலகநாடுகள் பல்வேறு முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், விஞ்ஞானிகள் சில வாய்வழி கிருமி நாசினிகள் மற்றும் மவுத்வாஷ்கள் மனித கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யும் திறனைக் கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

மருத்துவ வைராலஜி இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில் கூறி இருப்பதவது:-

ஆய்வின் போது, ஆராய்ச்சி குழு பல வாய்வழி மற்றும் நாசோபார்னீஜியல் வாய்க் கொப்பளிப்பான்களை ஒரு ஆய்வக அமைப்பில் சோதித்தது. அவை மனித கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யும் திறனைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சோதனை செய்யப்பட்ட தயாரிப்புகளில் குழந்தை ஷாம்பு, பெராக்சைடு புண்-வாய் சுத்தப்படுத்திகள் மற்றும் மவுத்வாஷ்கள் ஆகியை அடங்கும்.

தொற்றுநோய்க்குப் பிறகு வாயில் உருவாகும் வைரஸின் அளவைக் குறைக்க இந்த தயாரிப்புகள் சில பயனுள்ளதாக இருக்கும். கொரானாவை ஏற்படுத்தும் சார்ஸ், கோவ்-2 இன் பரவலைக் குறைக்க உதவக்கூடும்.

நாசி மற்றும் வாய்வழி சுத்திகரிப்பான்களில் பல மனித கொரோனா வைரஸை நடுநிலையாக்குவதற்கான வலுவான திறனைக் கொண்டுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இது கொரோனா தொற்றுக்கு ஆளான நபர்களால் பரவும் வைரஸின் அளவைக் குறைக்கும் ஆற்றலை இந்த தயாரிப்புகள் கொண்டிருக்கக்கூடும் என்று கூறுகிறது.

அமெரிக்காவின் பென் மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு ஆராய்ச்சியாளர் கிரேக் மேயர்ஸ் கூறும் போது

ஒரு தடுப்பூசியை உருவாக்குவதற்காக நாம் காத்திருக்கும் போது, வைரஸ் பரவுவதைக் குறைப்பதற்கான வழிமுறைகள் தேவை. நாங்கள் சோதித்த தயாரிப்புகள் மார்க்கெட்டில் இயல்பாக கிடைக்கின்றன. பெரும்பாலும் அவை நாம் தினசரி நடைமுறைகளில் பயன்படுத்தும் ஒரு சாதனம் ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com