டாவோஸ்: ரூ.4.99 லட்சம் கோடி அளவுக்கு மராட்டியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனம் ஸ்டீல், சிமெண்ட், உட்கட்டமைப்பு மற்றும் மின்சார வாகனங்கள் போன்றவற்றில் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்கிறது.
டாவோஸ்: ரூ.4.99 லட்சம் கோடி அளவுக்கு மராட்டியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
Published on

டாவோஸ்,

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடந்து வருகிறது. இதில், முதல் நாளான நேற்று மராட்டியத்துடன் மொத்தம் ரூ.4.99 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த பெரிய அளவிலான முதலீடுகளால் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஸ்டீல் மற்றும் உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 92 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இவற்றில் ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனம் பெரிய அளவில் ஒப்பந்தம் போட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஸ்டீல், சிமெண்ட், உட்கட்டமைப்பு மற்றும் மின்சார வாகனங்கள் போன்றவற்றில் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்கிறது.

இதனால், மராட்டியத்தில் குறிப்பிடும்படியாக நாக்பூர் மற்றும் கச்சிரோலி நகரங்களில் 10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மராட்டியத்தின் வளர்ச்சிக்காக உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்படுவதற்காக ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டாலுக்கு முதல்-மந்திரி பட்னாவிஸ் நன்றி தெரிவித்து கொண்டார்.

வர்த்தகம் செய்வதில் எளிமை என்ற மராட்டிய அரசின் கொள்கையே இதுபோன்ற பெரிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான முக்கியதொரு காரணியாக உள்ளது என பட்னாவிஸ் வலியுறுத்தி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com