போலந்து பிரதமர், பாதுகாப்பு மந்திரிக்கு கொலை மிரட்டல்; ஒருவர் கைது

அந்நாட்டின் மூத்த அரசியல்வாதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 23 வயது வாலிபரை போலீசார் கைது செய்திருந்தனர்.
உள்படம்:  பாதுகாப்பு துறை மந்திரி
Published on: 

வார்சா

போலந்து பிரதமர், பாதுகாப்பு மந்திரிக்கு கொலை மிரட்டல் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

போலந்து நாட்டின் பிரதமராக இருந்து வருபவர் டொனால்ட் டஸ்க். அவருடைய அரசில் பாதுகாப்பு துறை மந்திரியாக இருப்பவர் விளாடிஸ்லாவ் கோசினியாக்-காமிஸ். இவர்கள் இருவரையும் குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுபற்றி இணையதளம் வழியே கிடைத்த தகவலை போலீசார் தீவிர ஆய்வு செய்தனர்.

ஒருவர் கைது

இதனை அடுத்து, உள்துறை மந்திரி மார்சின் கீர்வின்கி உத்தரவின் பேரில் நாட்டின் பாதுகாப்பு முகமையின் பயங்கரவாத எதிர்ப்பு மையத்தில் அவசர ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டது. தலைவர்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும், சதியை முறியடிக்கவும் உளவுத்துறையினர் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினர்.

இதுதொடர்பாக போலந்தின் தெற்கே லோயர் சிலேசியா பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 60 வயது இருக்கும். விரைவான மற்றும் உறுதியான நடவடிக்கை எடுத்து ஒருவரை கைது செய்ததற்காக போலீசாருக்கு டஸ்க் மற்றும் கோசினியாக்-காமிஸ நன்றி தெரிவித்து கொண்டனர். கடந்த ஆகஸ்டில், அந்நாட்டின் மூத்த அரசியல்வாதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 23 வயது வாலிபரை போலீசார் கைது செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com