ஈகுவடோரியல் கினியாவின் ராணுவ ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 98 ஆக உயர்வு

ஈகுவடோரியல் கினியாவின் ராணுவ ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது.
ஈகுவடோரியல் கினியாவின் ராணுவ ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 98 ஆக உயர்வு
Published on

மலாபோ,

மத்திய ஆப்பிரிக்க நாடான ஈகுவடோரியல் கினியாவின் பாட்டா நகரில் ராணுவ ஆயுத கிடங்கில் டைனமைட் என்ற வெடிபொருள் திடீரென தொடர்ச்சியாக வெடித்தது. இந்த சக்தி வாய்ந்த இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கினியாவின் பாட்டா நகரில் ராணுவ ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் படுகாயமடைந்தவர்கள் எண்ணிக்கை 615 ஆக உயர்ந்துள்ளது. அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக டைனமைட் வெடிபொருளை பயன்படுத்தும்பொழுது பாதுகாப்பு விசயங்களை கவனத்தில் கொள்ளவில்லை என கினியா அதிபர் டியோடோரா ஓபியாங் தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com