இந்தூரில் அசுத்த நீரால் பலி 30 ஆக உயர்வு; உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டு

மத்திய பிரதேசத்தில் வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்ட மாசுபட்ட நீரால் தினமும் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்தூரில் அசுத்த நீரால் பலி 30 ஆக உயர்வு; உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டு
Published on

இந்தூர்,

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் நகரம் இந்தியாவின் தூய்மையான நகராக தொடர்ந்து 7 ஆண்டுகளாக தேர்வாகி உள்ளது. இந்த நகரில் மவு, பகீரத்புரா பகுதிகளில் ஒரு பொது கழிப்பறைக்கு அடியில் சென்ற குடிநீர் குழாயில் கசிவு காரணமாக வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்ட மாசுபட்ட நீரால் தினமும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.

ஆயிரக்கணக்கானோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த அசுத்தமான குடிநீர் காரணமாக இதுவரை 28 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டினர்.

இந்த சூழலில் கடந்த வாரம் மீண்டும் அதே பகுதியில் கழிவுநீர் கலந்த அசுத்தமான குடிநீர் விநியோகிக்கப்பட்டதால் 22 பேர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் பகீரத்புரா பகுதியில் 62 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்து விட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

மாசுபட்ட தண்ணீர் பிரச்சினை குறித்து விசாரணை நடத்த ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி தலைமையில் ஆணையத்தை மத்தியபிரதேச அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com