உலகம் முழுவதும் கொரோனா பலி 59 ஆயிரத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 59 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பலி 59 ஆயிரத்தை தாண்டியது
Published on

வாஷிங்டன்,

சீனாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால், அது மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு நாடும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் நோய்க்கிருமி பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியாததால் செய்வது அறியாமல் உலக நாடுகள் திகைத்து நிற்கின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் நேற்று 10 லட்சத்தை தாண்டியது. இதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை கடந்தது.

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், ஈரான், இங்கிலாந்து நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இனி வரும் நாட்களில் அமெரிக்கா, ஸ்பெயின், இங்கிலாந்து நாடுகளில் நிலைமை மேலும் மோசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com