கொரோனா தடுப்பூசியை முதன்முறையாக சிறுவர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க முடிவு

6 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு முதன்முறையாக கொரோனா தடுப்பூசி மருந்துகளை செலுத்தி பரிசோதனை செய்யப்படுகிறது.
கொரோனா தடுப்பூசியை முதன்முறையாக சிறுவர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க முடிவு
Published on

லண்டன்,

கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இவற்றில் ஆஸ்டிராஜெனிகா தடுப்பூசி மிக குறைந்த விலையில் எளிதில் வினியோகிக்கும் வகையில் உள்ளது என கூறப்படுகிறது. உலகிற்கான தடுப்பூசி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இதுவரை அனைத்து நாடுகளிலும் முன்கள பணியாளர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி போடும் பணிகள் நடந்துள்ளன. இந்நிலையில், 6 முதல் 17 வயதுக்கு உட்பட்ட 300 தன்னார்வலர்களுக்கு முதன்முறையாக கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனை செய்யப்படுகிறது.

இதன்பின்னர் குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தி, தடுப்பூசியின் பாதுகாப்பு ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கான படிப்பு ஒன்றை இங்கிலாந்து நாட்டிலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த ஆண்டில் 300 கோடி தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்ய ஆஸ்டிராஜெனிகா இலக்கு நிர்ணயித்து உள்ளது. வரும் ஏப்ரலில் மாதம் ஒன்றுக்கு 20 கோடி தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com