சேவை பாதிப்பு; மன்னிப்பு கோரியது மைக்ரோசாப்ட்

எங்கள் ஆய்வு முடிந்தவுடன் இந்த பிரச்சினை தொடர்பாக முழுமையான அறிக்கை வெளியிடப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது.
மன்னிப்பு கோரியது மைக்ரோசாப்ட்
Published on: 

வாஷிங்டன்,

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட்டில் நேற்று அதிகாலை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதனால் உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட்டின் அவுட்லுக், மைக்ரோசாப்ட் 365, டீம்ஸ், உள்ளிட்ட சேவைகள் முடங்கின. இதையடுத்து இந்த சேவைகளை பயன்படுத்த முடியாமல் அலுவலகங்கள், வங்கிகள் விமான நிறு வனங்கள் உள்ளிட்டவை களின் செயன் பாடுகள் பாதிக்கப்பட்டன செய்ய தொழில்நுட்ப கோளாறை சரி எடுக்கப்பட்டதாக மைக்ரோ நடவடிக்கை சாப்ட் தெரிவித்தது. சுமா 36 மணி நேர போராட் டத்திற்குப் பிறகு சேவைகள் சீரடைந்தன.

இந்த நிலையில் தங்கள சேவைகள் பாதிக்கட் பட்டதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் மன்னிப்பு கேட்டு உள்ளது. இதுதொடர்பா அந்நிறுவனம் தனது எக்ஸ்வலை தள பக்கத்தின் கூறியதாவது:-

எங்கள் நிறுவனத்தின் சேவைகள் பாதிக்கபட்டதற்காக வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் சேவைகள் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் அறிவோம் அந்தப் பொறுப்பை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். நாங்கள் அடிப்படைச் சிக்கலைக சரி செய்துவிட்டோம்.

மீதமுள்ள வாடிக்கையாளர்களுக்கும் பிராந்தியங்களுக்கும் சேவையைத் தொடர்ந்து மீட்டெடுத்து வருகிறோம். அதற்கு அதிக நேரம் எடுத்தாலும் இது ஒரு நிலையான மீட்டெடுப்பை உறுதிசெய்ய உதவியது.

எங்கள் ஆய்வு முடிந்தவுடன் இந்த பிரச்சினை தொடர்பாக முழுமையான அறிக்கை வெளியிடப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்கள் மீண்டும் ஏற்படா மல் தடுப்பது எப்படி என்ப தையும் எங்கள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளது.

X