மன்னர் பற்றி அவதூறு: தாய்லாந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

கடந்த 2023-ம் ஆண்டு அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மன்னர் பற்றி அவதூறு: தாய்லாந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
Published on: 

தாய்லாந்தில் மன்னர் குடும்பத்தை விமர்சிப்பதற்கு எதிராக மிகக் கடுமையான சட்டம் அமலில் உள்ளது. இந்தச் சட்டத்தை மீறியதாக அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. ருக்ஷனோக் ஸ்ரீநோர்க் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2021-ம் ஆண்டு சமூக வலை தளத்தில் மன்னர் குடும்பத்தை அவதூறாக விமர் சித்து 2 பதிவுகளை வெளியிட்டதாகக் கூறப்படும் வழக்கில், கடந்த 2023-ம் ஆண்டு அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், பாங்காக் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. அதில், ஒரு பதிவிற்கான போதிய ஆதாரங்கள் இல்லாததால் அந்தக் குற்றச்சாட்டை ரத்து செய்த கோர்ட்டு, மற்றொரு பதிவிற்கான தண்டனையை உறுதி செய்து சிறைத் தண்டனையை 3 ஆண்டுகளாகக் குறைத்தது. பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால், எம்.பி. பதவி தப்பியது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

X